உயிரோடு இருக்கும் வரை தான் மரியாதை, இறந்த பிறகு கண்டுக்காத சூர்யா.. ஓடோடி வந்த விஜய் சேதுபதி

Actor Suriya: சூர்யா பற்றி எப்போதுமே நல்ல விஷயங்கள் தான் மீடியாவில் வெளியாகும். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி கொள்கிறார். அப்படித்தான் தற்போது அவர் செய்திருக்கும் ஒரு விஷயம் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சமீபத்தில் இயக்குனர் கே வி ஆனந்தின் மகளுடைய திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த கேவி ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Also read: வெறுக்கத்தக்க சினிமாவில் வந்த 5 லிப் லாக் காட்சிகள்.. சூர்யாவிடம் நடிகை பண்ணிய சேட்டை

இது திரை உலகிற்கு மிகப்பெரும் இழப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட இயக்குனரின் மகள் திருமணத்தில் அவரின் பட நடிகர்களான விஜய் சேதுபதி, ஜீவா உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரும் எதிர்பார்த்த சூர்யா மட்டும் வரவே இல்லை. கே வி ஆனந்த் இவரை வைத்து அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

அதில் அயன் படம் சூர்யாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படி இவருடைய வளர்ச்சிக்கு கே வி ஆனந்த்தும் ஒரு பங்காக இருந்திருக்கிறார். அப்படி பார்த்தால் சூர்யா இந்த திருமண விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Also read: பட வாய்ப்புக்காக நாய்க்குட்டியை தூக்கிட்டு நாலு நாள் அலைந்து திரிந்த எஸ் ஜே சூர்யா.. சுக்கு நூறாக உடைந்து போன அஜித்

மேலும் உயிரோடு இருக்கும்போது தான் மரியாதை. இறந்த பிறகு அது கிடையாது என்று சூர்யா நிரூபித்து விட்டதாகவும் பல பிரபலங்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி இப்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

அப்படி இருக்கும் போது அவரே இந்த விழாவில் கலந்து கொள்ள ஓடோடி வந்திருக்கிறார். ஆனால் சூர்யா கண்டும் காணாமல் இருந்தது பேசு பொருளாக மாறி இருக்கிறது. மேலும் தற்போது இவர் தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அது குறித்த போட்டோக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் சூர்யாவின் பெயரை டேமேஜ் செய்து இருக்கிறது.

Also read: ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அருண் விஜய்.. சூர்யாவின் முடிவால் அடித்த ஜாக்பாட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்