தல படத்தில் வில்லன் ரோல்.. விஜய் சேதுபதியின் அட்டகாசமான பதில்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அத்தனை எளிதில் எடை போட்டுவிட முடியாது. வில்லனாக துவங்கி ஹீரோக்களான எத்தனையோ நடிகர்களை கண்டிருந்த தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை இதுவரை கண்டதில்லை. எப்படியான நடிகர் என்பதனை அவர் படங்களே சொல்லும்.

ஹீரோவான பிறகு மாற்று கதாப்பாத்திரங்களில் நடிக்க மறுக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி ஒரு விசித்திரம் எனலாம் ஏன் விரிந்த சித்திரம் என்றும் சொல்லலாம். அதிலும் ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பெற்ற பிறகும் வில்லன் ரோல் என்பது மக்கள் செல்வனின் மகுடம்.

சில படங்களுக்கு குரல் கொடுப்பார் திடீரென சில படங்கில் சில நிமிடங்கள் வந்து செல்வார் இப்படியாக சினிமாவை ரசித்து ருசிக்க பழகிவிட்டார். சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு விக்ரம் வேதா படத்தில் ஒரு மாஸ் வில்லனாக தலைகாட்டினார்.

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு எதிராக சூப்பரான ஒரு பெர்பார்மன்ஸ் தந்தவர் இரண்டாம் ஹீரோவாக மாறிப்போனார். மாஸ்டரில் ஜேடிக்கு எதிரான பவாணி அத்தனை எளிதில் மறந்திட முடியுமா என்ன? மாஸ் ஹீரோ படம் என்பதனை கடந்து மாஸ் ஹீரோக்களின் படமானது மாஸ்டர்.

இப்படியாக இருக்க விக்ரம் படத்திற்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார் மக்கள் செல்வன். கமல்,பாஹத் பாசில், விஜய் சேதுபதி மூவரும் ஹீரோ மூவரும் வில்லன் என்கிற பிரதியை நிச்சயம் பிரதிபலிக்கும் படம் விக்ரம்.

இப்படியாக தனக்கு பிடித்த பாத்திரங்களை விரும்பி நடிக்கும் விஜய் சேதுபதியிடம் கமல் ரஜினி விஜய் என டாப் ரேட்டிங்கில் எஞ்சி இருப்பதோ தல தான் என்றும் தல படத்தில் வில்லனாக நடிப்பீரா என்ற கேள்வி நேரடியாகவே கேட்கப்பட.

vijaysethupathy-cinemapettai
vijaysethupathy-cinemapettai

சிரித்த முகத்துடன் எனக்கு எந்த ஈகோவும் கிடையாது தல சரி என்றால் ஒன்று என்ன பத்து படங்களில் கூட வில்லனாக நடிக்கிறேன் என்றாராம். மக்கள் செல்வன் என்றும் மக்கள் செல்வனாய் மக்கள் மனதில் நிறைந்திருக்க இந்த வெளிப்படையான பேச்சும் ஒரு காரணம் தான்.

Next Story

- Advertisement -