அரை சதம் அடித்த விஜய் சேதுபதி.. மெகா கூட்டணி, டைட்டிலோடு வெளிவந்த 50வது பட போஸ்டர்

Actor Vijay Sethupath: விஜய் சேதுபதி இப்போது பாலிவுட் பக்கம் ரொம்பவும் பிசியாக இருக்கிறார். ஷாருக்கான் உடன் இவர் நடித்திருக்கும் ஜவான் விரைவில் வெளிவர இருக்கிறது. இதைத்தொடர்ந்து கேத்ரினா கைப்புடன் நடித்துள்ள மேரி கிறிஸ்மஸ் படமும் ஜோராக தயாராகி கொண்டிருக்கிறது.

இப்படி பிஸியாக இருக்கும் நிலையில் இவர் தமிழ் பக்கம் வருவாரா என்ற ஒரு சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. அதை போக்கும் வகையில் இவருடைய 50வது பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இப்படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

Also read: குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியாது.. தேடி வந்தவர்களை துரத்தி விடும் விஜய் சேதுபதி

மேலும் இதில் பாலிவுட் பிரபலம் அனுராக் கஷ்யப் வில்லனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இவர் இமைக்கா நொடிகள் படத்தில் கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார். இப்படி ஒரு மெகா கூட்டணியுடன் தயாராகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் ரசிகர்கள் இன்று காலை முதலே சோசியல் மீடியாவை கலக்கி வந்தனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Also read: மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி

அதைத்தொடர்ந்து போஸ்டரில் விஜய் சேதுபதியின் உருவத்தோடு சேர்த்து சிலுவை, கழுகு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. மேலும் What Goes Around Comes Around என்ற வாசகமும் இருக்கிறது. இப்படியாக எதிர்பார்ப்பை மிரள வைக்கும் வகையில் வெளியான போஸ்டர் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் அரை சதம் அடித்துள்ள விஜய் சேதுபதியின் 50வது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி அடுத்த கட்ட சம்பவத்திற்கு தயாராகி இருக்கிறார்.

டைட்டிலோடு வெளிவந்த 50வது பட போஸ்டர்

vijay-sethupathy-poster
vijay-sethupathy-poster
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்