மூன்று நாளில் 50 கோடி வசூலித்த விஜய் சேதுபதி படம்.. வில்லத்தனத்தில் மிரட்டினா ஓடாம என்ன பண்ணும்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் சினிமா கேரியர் உச்சத்திற்கு மேல் உச்சத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் பவானி என்ற ஒற்றை கதாபாத்திரம் தான். ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதிதான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது போல.

மாஸ்டர் படத்திற்கு பிறகு அதிரடியான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உப்பென்னா. மகளின் காதலை எதிர்க்கும் கௌரவ தந்தையாக ராயணம் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார் விஜய் சேதுபதி.

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் மீண்டும் ஒரு வாரிசு நடிகராக சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வைஷ்ணவ் தேஜ்.

பிப்ரவரி 12ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம். ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாகி இருந்த உப்பென்னா திரைப்படம் மாஸ் வெற்றி பெற்றுள்ளது.

uppenna-cinemapettai
uppenna-cinemapettai

அதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதியின் ராயணம் கதாபாத்திரம் தானாம். இதனால் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு மார்க்கெட் அதிகமாகிவிட்டதாம். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதியை வில்லனாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் புகழ் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. இதனால் விஜய் சேதுபதி கேட்காமலேயே பல கோடி சம்பளத்தை வாரி இறைத்து வருகிறார்களாம் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்