தயாரிப்பாளர் செய்த முட்டாள்தனத்தாம்.. விஜய் சேதுபதிக்கு வந்த பேராபத்து, தலை தப்புமா.!

சமீப காலமாகவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் இவர் வில்லனாக நிறைய படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவர் நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் செய்த முட்டாள் தனத்தால் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டார்.

இதனால் அடுத்தடுத்து இவருடைய படங்கள் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கரண் சி புரடெக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் உருவான படம் மைக்கேல். இது பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியானது.

Also Read: நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும் தியேட்டரில் அதிக கூட்டம் இல்லாததால் அந்த படத்தை உடனே ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். இதற்கு தியேட்டர் விநியோகத்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

காரணம் படம் வெளிவந்து நான்கு வாரம் கழித்து தான் ஓடிடி வெளியிட வேண்டும். ஆனால் தயாரிப்பாளர் தியேட்டரில் பணம் வசூல் கம்மியாக இருக்கிறது என்று யாரையும் கேட்காமல் மூன்றாவது வாரத்திலேயே ஓடிடி பெரிய பணத்தை பெற்றுக் கொண்டே வெளியிட்டு விட்டார்.

Also Read: விஜய் சேதுபதியா ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் அருண் விஜய்.. தூக்கிவிட்டவரால் ஏற்பட்ட தர்ம சங்கடம்

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஒன்றாக பேசி இனிமேல் இந்த தயாரிப்பாளர் தயாரிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் இந்த படத்தின் நடித்தவர்களின் படங்கள் வெளியிடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற போகிறார்களாம்.

இப்படி மைக்கேல் பட தயாரிப்பாளர் செய்த முட்டாள்தனத்தால் இந்த படத்தில் நடித்த சந்திப் கிஷன், இப்பொழுது தான் வளர்ந்து வருகிறார் மற்றும்  இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் அவர்களுக்கும் பிரச்சனை உருவாக இருக்கிறது.

Also Read: அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.. விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட அவமானம்

- Advertisement -