காலியாகும் விஜய் சேதுபதியின் சினிமா கேரியர்.. Sk கிட்டயே நெருங்க முடியால

Vijay Sethupathi – Sivakarthikeyan : விஜய் சேதுபதி எந்த பின்புலமும் இல்லாமல் சொந்த உழைப்பால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். மேலும் திரை மறையில் இருந்த அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். விஜய் சேதுபதியின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

அதாவது ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடிக்கும் போது சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டது. இதனால் தனக்கு வரும் வில்லன் கதாபாத்திரங்களை துணிச்சலுடன் ஏற்று நடித்தார். அதோடு தனக்கு வரும் பட வாய்ப்புகளையும் வேண்டாம் என்று சொல்லாமல் சகட்டுமேனிக்கு நடித்து வந்தார்.

இந்த சூழலில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் சுத்தமாக குறைந்துவிட்டது. இப்போது அவருடைய சம்பளமும் மிகவும் குறைந்து உள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில் தான் சிவகார்த்திகேயனும் வளர்ந்து வந்தார்.

Also Read : காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து வரும் விஜய் சேதுபதி.. கைவசம் இருக்கும் 6 படங்கள்

ஆனால் சிவகார்த்திகேயன் டஃப் 5 நடிகர்களின் பட்டியலில் வந்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அவரது சம்பளமும் 35 கோடியில் இருந்து 40 கோடி வரை வாங்குகிறார். இதுவே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க 10 கோடியில் இருந்து 15 கோடி வரை தான் சம்பளம் வாங்குகிறாராம்.

அதுவும் ஹீரோவாக நடிக்க அவருக்கு வாய்ப்பே வருவது இல்லையாம். அப்படியே ஒரு சில படங்களில் வாய்ப்பு வந்தாலும் அதற்கு சம்பளம் 10 கோடி தான் கொடுக்கப்படுகிறது. இப்போது சிவகார்த்திகேயன் சம்பளத்தைக் கூட விஜய் சேதுபதியால் தொட முடியாமல் இருக்கிறது.

Also Read : தெருக்கோடியிலிருந்து கோபுரத்திற்கு வந்த விஜய் சேதுபதியின் அசர வைக்கும் சொத்தின் மதிப்பு!

- Advertisement -spot_img

Trending News