முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதிக்கு பதில் நடிக்கபோவது இவர்தான்.. உங்களுக்கு செட் ஆகுறது கஷ்டம்தான்

ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவர்களின் பயோபிக் படங்கள் உருவாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கூட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படம் வெளியானது. அந்த வகையில் தான் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவரது பயோபிக் படத்தை எடுக்க முடிவு செய்தார்.

ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக தோனியின் வரலாற்று படம் சமீபத்தில் வெளியான கபில்தேவ் படம் போன்ற படங்கள் உள்ளன. அந்த வரிசையில் முத்தையாவின் பயோபிக் படமும் இடம்பற வேண்டும் என அவர் விரும்பினார்.

கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததை மையமாக வைத்து அவரது பயோபிக் படத்தை உருவாக்க எண்ணினார். அதன்படி அந்த படத்தில் அவர் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ஆனால் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவிற்கு ஆதரவாக இருந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்ததால் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியை தவிர தனது பயோபிக்கிற்கு யாருமே சரியாக பொருந்த மாட்டார்கள் என்பதால் முத்தையா முரளிதரனும் தனது பயோபிக் படத்தை கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது இந்த படம் மீண்டும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விஜய்சேதுபதிக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் படேல் 800 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் விஜய் சேதுபதி அளவிற்கு இவர் முத்தையா கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதுதான் பலரின பொதுவான கருத்தாக உள்ளது. எனவே இது எந்தளவிற்கு வொர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை.