சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

லவ்வர் பாயாக மாறப்போகும் விஜய் சேதுபதி.. ரீ என்ட்ரியில் மிரட்ட வரும் இயக்குனர்

விஜய் சேதுபதி இப்போது அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது இந்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதிலும் ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடித்து வரும் ஜவான் திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இவர் பிரேமம் பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறாராம். தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரனுக்கு பிரேமம் திரைப்படம் மிகப் பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அவியல் என்ற அந்தாலஜி படத்தை இயக்கியிருந்தார்.

Also read: மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

அதன் பிறகு அவர் பல வருட இடைவெளிக்கு பின் கோல்ட் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் பிரேமம் அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதை தொடர்ந்து அவர் இப்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு காதல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழிலும் ரீ என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இவர் தமிழில் படம் எடுப்பதற்காக பல ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதில் விஜய்யின் மகன் சஞ்சய் உட்பட பலரை நடிக்க வைப்பதற்கு முயற்சியும் செய்து இருக்கிறார். ஆனால் அது கைகூடாமல் போகவே தற்போது விஜய் சேதுபதியிடம் அவர் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

Also read: விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கும் மிஷ்கின்.. அந்த பட சாயலில் ஒரு திரில்லர் கதை ரெடி

அந்த வகையில் இப்படம் 96 படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு காதல் படமாக உருவாக இருக்கிறதாம். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதிலும் ராம் என்ற அந்த கதாபாத்திரம் இப்போதும் கூட இளம் பெண்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இது விஜய் சேதுபதிக்கும் பேர் சொல்லும் ஒரு கேரக்டராகவும் அமைந்துவிட்டது.

தற்போது அப்படி ஒரு கேரக்டரில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம். அல்போன்ஸ் புத்திரன் கூறிய கதை ரொம்பவும் பிடித்து போனதால் உடனே சம்மதம் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி விரைவில் ஒரு லவ்வர் பாயாக மாற இருக்கிறார். தற்போது ஹீரோயின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் மூலம் தரமான ஒரு வெற்றியை கொடுப்பதற்கும் இயக்குனர் ரெடியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தம்பி தம்பி என சொல்லியே அலைக்கழிக்கும் விஜய் சேதுபதி.. கண்டுக்காமல் விஜய் நீட்டிய கம்பி

- Advertisement -

Trending News