அஜித்தை பாலோ செய்யும் விஜய் சேதுபதி.. சத்தமே இல்லாமல் அவர் செய்யும் வேலை

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய மகா கலைஞன் என்று சொல்லலாம். ஹீரோவாக, வில்லனாக, வயது முதிர்ந்த கேரக்டராக, காமெடியனாக எது கொடுத்தாலும் அது சிறப்பாக செய்து முடிக்க கூடிய திறமை உடைய நடிகர் இவர். மேலும் தயாரிப்பாளர்களுக்காகவும், இயக்குனர்களுக்காகவும் மட்டுமே படங்கள் பண்ணக்கூடிய நல்ல மனதை கொண்டவர் இவர்.

விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர். இவரை ஹீரோவாக மாற்றிய படம் என்றால் தென்மேற்கு பருவக்காற்று தான். முதல் படமே இவருக்கு தேசிய விருது படமாக அமைந்துவிட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Also Read:விஜய் சேதுபதி இல்லாத சூது கவ்வும் 2.. 10 வருடங்களுக்குப் பிறகு வேகம் எடுக்கும் படப்பிடிப்பு

ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர் என்பதால் இவரிடம் பெரிதாக பந்தாவான செயல் எதுவும் இருக்காது. சாதாரண சட்டை, பேண்ட், மீசை தாடியுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு எளிமையானவர். மேலும் தன்னுடைய ரசிகர்களை ரொம்பவும் மதிக்க தெரிந்தவர். அவர்களுடன் அன்பாகவும், நட்புடனும், எளிமையாகவும் பழகுவதால் அவருடைய ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதி மீது பெரிய அளவில் அன்பு இருக்கிறது.

தற்போது இயக்குனர் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்கே செல்வமணி விஜய் சேதுபதி பற்றி பகிர்ந்த விஷயம் ஒன்று அவர் மீது இன்னும் அதிகமான மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காலத்தில் சின்ன உதவி செய்பவர்களே அதை பெரிதாக அலட்டி கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் சத்தமே இல்லாமல் விஜய் சேதுபதி ஒரு பெரிய உதவியை செய்திருக்கிறார்.

Also Read:இமேஜே போனாலும் துணிந்து நடித்த 5 நடிகர்கள்.. ஷில்பாவாக சொக்க வைத்த விஜய் சேதுபதி

பெப்சி அமைப்பின் மூலம் அந்த யூனியனை சேர்ந்த 250 பேருக்கு வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்தில் பணபற்றாக்குறை ஏற்படும் பொழுது விஜய் சேதுபதியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அவர் ஆளுக்கு 50 ஆயிரம் கணக்கில் 250 பேருக்கும் சேர்த்து பணம் கொடுத்திருக்கிறார். மேலும் இன்னும் அதிகமான தொகை தேவைப்படுகின்ற நேரத்தில் அவர் முப்பது லட்சம் சேர்த்து கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த இந்த பேருதவி தமிழ் சினிமாவில் அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படி ஒரு உதவி செய்தும் அதை வெளியில் எந்த விளம்பரத்திற்காகவும் சொல்லிக் கொள்ளாமல் வழக்கம் போல அவருடைய வேலையை அவர் செய்து வருவது நிஜமாகவே எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

Also Read:குரங்கு பட இயக்குனரின் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி.. அதிரடியாக வெளிவந்த 50வது படத்தின் அப்டேட்