ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முளையிலேயே கிள்ளி எறிந்த விஜய்சேதுபதி.. சுமைதாங்கியாக நிற்கும் அர்னவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 வாரம் முடிவடைந்த நிலையில், வீட்டில் போட்டியாளர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை தொகுப்பாளர் விஜய் சேதுபதி வார இறுதி நாட்களில் தீர்த்து வைப்பதுடன், அனைவரையும் அவர் ஸ்டைலில் கிழித்து தொங்க விடுகிறார்.

இந்த நிலையில், சேதுபதி மகள் சாச்சனா சிறுபிள்ளைத்தனமாக நடந்து கடுப்பேற்றி கொண்டிருக்கிறார். மறுப்பக்கம், ரொம்ப தெளிவாக இருப்பதாக எண்ணி, புதை குழிக்குள் விழுகிறார் அர்னவ். பிக்பாஸ் 14 ஆவது நாளான இன்று விஜய் சேதுபதி அர்னவ்வை கேள்வியால் அசிங்கப்படுத்தி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற போட்டியில் ஆடியன்ஸ் வாட்சிங் ஆடியன்ஸ், குரூப்ல டூப்பு, டம்மி பாவா, ட்ராமா குயின் போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் வழங்கபட்ட விருதுகள் ஒரே ஆளுக்கு வந்து குவிந்தது. தாங்கமுடியாமல் தாங்கி நிற்கிறார் அர்னவ். முதலில் ஆரம்பித்த ஜெஃப்ரி தான் வாங்கிய ஆடியன்ஸ் வாட்ச் ஆடியன்ஸ் விருதிற்கு நான் பொருத்தமானவன் இல்லை. அதை அர்னவ்விற்கு கொடுக்கிறேன் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, கேப்டன் சத்யா வாங்கிய குரூப்ல டூப்பு விருதையும் அவர் அர்னவ்விற்கு அளித்துள்ளார். மேலும், முத்துக்குமரன் வாங்கிய டம்மி பாவா, தீபக்கின் ட்ராமா குயின் போன்ற விருதுகளும் அர்னவ்விற்கு வழங்கப்பட்டது.

இதெல்லாம் நமக்கு தேவையா கோபி?

இதுகுறித்து விஜய் சேதுபதி அர்னவ்விடம் கேள்வி எழுப்புகிறார், இதுகுறித்து பதிலளித்த அர்னவ் இத்தனை விருதுகளையும் பெற்றது பெருமையாக இருக்கிறது எனக் கூறினார். உடனே சற்றும் யோசிக்காமல் அசிங்கப்படுத்திவிட்டார் விஜய் சேதுபதி.

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. விளையாட கொடுத்த நேரத்தை தவறவிட்டுவிட்டு இப்போது பெருமையாக இருக்கிறது எனக் கூறினால் என்ன அர்த்தம் எனக் கேட்டு மிகவும் கடுப்பாகியுள்ளார். எதோ தான் அசிங்கப்பட்டதை வெளிக்காட்டாமல், சமாளிக்க வேண்டும் என்று அர்னவ் நினைத்து ஒன்று பேச, அதற்க்கு ‘இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. விளையாட கொடுத்த நேரத்தை தவறவிட்டுவிட்டு இப்போது பெருமையாக இருக்கிறது எனக் கூறினால் என்ன அர்த்தம் எனக் கேட்டு மிகவும் கடுப்பாகியுள்ளார்.

இதை பார்த்த அனைவருக்குமே குபீர் சிரிப்பாகி விட்டது.. மேலும் இதெல்லாம் நமக்கு தேவையா கோபி.. ஏன் வாண்ட்டடா இப்படி அசிங்கப்படணும் என்று நக்கலடித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News