மீண்டும் அதே கதையா.? ஆள விடுங்கடா என தலைதெறிக்க ஓடிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 800. இப்படத்தில் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். இதற்கு தமிழ்நாட்டில் பெருவாரியான எதிர்ப்புகள் கிளம்பியது எப்படி ஒரு துரோகியின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

ஆனால் முதலில் விஜய்சேதுபதி அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் எப்படியும் அமைதியாக விட்டுவிடுவார்கள். பின்பு படத்தில் நடித்து விடலாம் என நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் தமிழ் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா கண்டிப்பாக இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது. அப்படி நடித்தால் விஜய் சேதுபதி தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என பெருவாரியான சர்ச்சைகளை கூறி வந்தனர்.

இதனால் ஆடிப்போன விஜய்சேதுபதி உடனே இனிமேல் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறியிருந்தார்.அதன்பிறகு பத்திரிகையாளர் ஒருவர் மீண்டும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிப்பதாக செய்திகள் வருகிறது எனக் கேட்டார்.

அதற்கு கொஞ்சமும் மரியாதை இல்லாமல் சும்மா இருக்க மாட்டீங்களா அந்த பிரச்சினைக்கு முடிந்துவிட்டது என கோபமாக பேசி இருந்தார். இதனால் பலரும் விஜய்சேதுபதி என்ன இப்படி எல்லாம் பேசி வருகிறார். வருமானம் வந்த பிறகு யாரையும் மதிப்பதில்லை என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். தற்போது இந்த பிரச்சினை முடிந்து உள்ளதால் இப்படத்தின் இயக்குனர் மீண்டும் விஜய் சேதுபதி நேரில் சந்தித்து படத்தில் நடிப்பீர்களா என கூறியுள்ளார்.

800-poster-cinemapettai
800-poster-cinemapettai

அதற்கு விஜய் சேதுபதி இனிமேல் இப்படத்தில் நடித்தால் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் கண்டிப்பாக எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதனால் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் நீங்கள் நடித்தால் படம் நன்றாக இருக்கும் என மறுபடியும் பேச அதற்கு விஜய் சேதுபதி கையெடுத்து கும்பிட்டபடி தயவு செய்து என்னை ஆள விடுங்கள் எனக் கூறியுள்ளார்.