பிரமாண்ட படத்தை ஓரங்கட்ட போகும் விஜய் சேதுபதி.. இந்த படமும் ஓடலைன்னா அதோ கதிதான்

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல காதல் திரைப்படம் வந்து பல வருடங்கள் ஆகிறது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படம் நகைச்சுவை காதல் படமாக வெளியாக உள்ளது.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. கே ஜி எஃப் 2 மற்றும் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாகக் கொண்டு 2018இல் யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கே ஜி எஃப். இந்நிலையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல்தான் இந்தியத் திரைப்படமாக ராக்கெட்ரி படம் உருவாகியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

கே ஜி எஃப் 2, காத்துவாக்குல 2 காதல், ராக்கெட்ரி படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் எந்த படம் வசூலை அள்ளிக் கொடுக்கிறது என்று பார்க்கலாம். கே ஜி எஃப் முதல் பாகம் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கே ஜி எஃப் 2 வெளியாவதால் அதிக வசூலைக் குவிக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஒரு சிலர் கேஜிஎஃப் படத்தையே விஜய்சேதுபதியின் படம் சாதனையை முறியடிக்கும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படமும் ஓடலைன்னா விஜய் சேதுபதியின் கதி அதோ கதிதான். இரண்டே வாரத்தில் மூன்று படங்களை வெளியிட்டு தொடர் தோல்வியை சந்தித்தார் விஜய் சேதுபதி.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்