தெலுங்கில் எகிறும் விஜய் சேதுபதி மார்க்கெட்.. 2 வருடம் கழித்து டப் செய்த சூப்பர் ஹிட் படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான உப்பென்னா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கிலும் நடிகர் விஜய் சேதுபதி பிரபலமாகி உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படம் பல விருதுகளை குவித்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். படம் வெளியான போதே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது.

தற்போது விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் மார்க்கெட் உயர்ந்து வருவதால், சூப்பர் டீலக்ஸ் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி தெலுங்கின் பிரபலமான ஆஹா OTT தளத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி சூப்பர் டீலக்ஸ் தெலுங்கு டப்பிங் வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai
- Advertisement -