விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி.. சன் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, படத்தில் இவரது நடிப்பை அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டினர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகிவருகின்றன. விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் கூட விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் கையில் வைத்திருக்கும் விஜய்சேதுபதி தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ எனும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் தற்போது அதே சன் டிவி இடம் மாஸ்டர் செஃப் எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

தற்போது சன்டிவி அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்சேதுபதி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து மாஸ்டர் செஃப் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் போற போக்கில் பார்த்தால் விஜய் சேதுபதி படங்களில் எந்த அளவிற்கு பிஸியாக இருப்பார் அதே அளவுக்கு நிகழ்ச்சிகளிலும் பிஸியாகி விடுவார் என கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்