சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முழு வன்மத்தையும் கக்கிய அர்ணவ்.. விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்சன்

Biggboss 8: சனி ஞாயிறு என்றாலே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டி விடுகிறது. அதிலும் விஜய் சேதுபதியின் அதிரடியான ஃபார்முலா ஒட்டுமொத்த ரசிகர்களையும் சபாஷ் போட வைத்திருக்கிறது. அதுவே தற்போது நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

அதன்படி கடந்த வாரம் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று அர்ணவ் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறி உள்ளார். இதை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் சமாளித்தபடி அனைவருக்கும் பாய் சொல்லி வெளியேறினார்.

அதன் பிறகு நடந்தது தான் தரமான சம்பவம். கடந்த வாரம் அவர் செய்த வேலையால் ஒட்டுமொத்த பாய்ஸ் டீம் அவரை ஓரங்கட்டினார்கள். ஆனால் வீட்டுக்குள் இருக்கும்போது அதை அர்ணவ் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுத்தும் கூட அவர் அதை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் எலிமினேட் ஆனவுடன் மேடைக்கு வந்த அவர் பாய்ஸ் டீமை முடிந்த அளவு மோசமாக பேசினார்

ஆரம்பத்தில் அதை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி அதன் பிறகு அவருடைய பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். இவர்கள் என்னுடைய ஹவுஸ் மேட்ஸ் உங்கள் மொத்த வன்மத்தையும் காட்டுவதற்கான இடம் இது கிடையாது.

அர்ணவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே பேசி இருக்கணும். இப்ப நீங்க இந்த அளவுக்கு மோசமாக பேசுறது சரி கிடையாது என கரெக்டான அறிவுரையை வழங்கினார். மேலும் மத்தவங்கள மரியாதையா நடத்துவது தான் நமக்கான மரியாதையை கொடுக்கும்.

மக்கள் ஓட்டு போட்டு தான் நீங்க வெளியேறி இருக்கிறீர்களா என வெளுத்து வாங்கி விட்டார். இதற்கு ஆடியன்ஸ் தரப்பிலும் பலத்த கைதட்டல் எழுந்தது. ஆனாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி அர்ணவ் நின்று கொண்டிருந்தார்.

இப்படியாக போகிற போக்கில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கெட்ட பெயரை அவர் சம்பாதித்து சென்று விட்டார். கடந்த வாரம் ரவீந்தர் சொன்னது உண்மை என்பதையும் அவர் நிரூபித்து விட்டார்.

இதுதான் அவருடைய ஒரிஜினல் குணம். இந்த எலிமினேஷன் இவருக்கு தேவையானது தான் என்ற கருத்துக்கள் இப்போது கிளம்பியுள்ளது. இதில் மக்கள் செல்வன் தான் வேற லெவலில் கலக்கி விட்டார்.

- Advertisement -

Trending News