தோல்வி பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. கதையே கேட்காமல் கொடுத்த வாக்குறுதி

எந்த கதாபாத்திரம் என்றாலும் அடித்து துவம்சம் செய்யும் விஜய் சேதுபதி இப்பொழுது பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் இந்த இடத்தை சாதாரணமாக பிடிக்கவில்லை.

பல கடின போராட்டத்திற்கு பின்னரே இன்று தமிழ் சினிமாவில் நிலையான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இவர் 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை 5 வருடங்களுக்கு மேலாக சிறு வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also Read: விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை

அதன் பின் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படத்திற்கு பிறகு தான் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் இப்போது வருடத்திற்கு 10 படங்களை அசால்ட் ஆக நடித்து தள்ளும் விஜய் சேதுபதி, எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என நிறைய படங்களில் கமிட் ஆகி கொண்டிருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்த படம் ஆரஞ்சு மிட்டாய். 2015 ஆம் ஆண்டு நகைச்சுவை திரைப்படமாக வெளியான ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இந்த படத்தை இயக்கியவர் பிஜூ விஸ்வநாத். அவரோடு அடுத்த படத்திலும் கைகோர்க்கிறாராம்.

இந்த பிஜூ விஸ்வநாத் ஒரு பேராசிரியராம். இவர் மீது ஏகப்பட்ட மரியாதை வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த மரியாதை காரணமாக இப்பொழுது ஆரஞ்சு மிட்டாய் படம் ஓடாவிட்டாலும் இவருக்காக ஒரு படம் பண்ண இருக்கிறார்.

Also Read: திருநங்கையாக நடித்துக் மலைக்க வைத்த டாப் 6 ஹீரோக்கள்.. அப்படியே வாழ்ந்து காட்டிய சூப்பர் டீலக்ஸ்

படத்தின் கதையை கூட கேட்காமல் விஜய் சேதுபதி பிஜூ விஸ்வநாத் கேட்டவுடனே அவருக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். பிஜு விஸ்வநாத் இயக்குனராக மட்டுமல்லாமல் வசன எழுத்தாளர், புகைப்பட இயக்குனராகவும் உள்ளார். தமிழ், ஆங்கிலம், ஐரிஷ் போன்ற இந்திய மொழிகள் பலவற்றுள் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

ஆகையால் இந்த முறை விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையை துவங்கி உள்ளார். எனவே பிஜூ விஸ்வநாத் – விஜய் சேதுபதி இணையும் படத்தின் முழு அப்டேட்டும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: எல்லை மீறிய லிப் லாக் காட்சியில் ராசி கன்னா.. என்னது விஜய் சேதுபதியும் இதுக்கு உடந்தையா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்