திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

வெற்றிப் படத்திற்காக ஏங்கும் விஜய் சேதுபதி.. எங்க போனாலும் அடுத்தடுத்து விழும் அடி

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதிலும் விக்ரம் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் எங்கேயோ போயுள்ளது. அதுமட்டுமன்றி தற்போது பாலிவுட்டில் கத்ரீனா கைப் உடன் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது பெரிய இயக்குனர்கள் எல்லோருமே வில்லன் கதாபாத்திரம் என்றால் முதலில் விஜய்சேதுபதி தான் தேர்வு செய்கிறார்கள்.

இவ்வாறு விஜய் சேதுபதி பல தடைகளை தாண்டி மிக உயரத்தை அடைந்து உள்ளார். ஆனால் மலையாள சினிமாவில் விஜய் சேதுபதியால் வெற்றிப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். மார்க்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதி மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் விஜய் சேதுபதியின் முதல் படமே அங்கு தோல்வியை தழுவியது. இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து 19 (1)ஏ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை விஎஸ் இந்து என்பவர் இயக்கியிருந்தார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நித்யா மேனன் இப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 19 ஆவது பிரிவின்படி ஒரு மனிதருக்கு பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகவும் தொய்வுடன் செல்வதாக விமர்சனங்கள் எழுந்தது.

மேலும் இப்படத்தில் மலையாள எழுத்தாளராக நடித்திருக்கும் விஜய் சேதுபதி அம்மொழியில் பேசுவதற்கு சிரமப்படுவது மிகவும் முரணாக அமைந்துள்ளது. இப்படத்தில் சில விஷயங்கள் மேலோட்டமாக எடுக்கப்பட்டிருந்தது. இதனால் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த முறையாவது மலையாளத்தில் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற விஜய்சேதுபதியின் கனவு பலிக்காமல் போய்விட்டது. மேலும் எப்படியாவது இங்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம் விஜய் சேதுபதி.

- Advertisement -

Trending News