விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். ஒரு படத்தில் ஹீரோ என்றால் அடுத்த படத்தில் வில்லனாக மிரட்டுகிறார். இவ்வாறு ஹீரோ, வில்லன் என மாறி மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கத்ரீனா கைப் உடன் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த விக்ரம் படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கயுள்ளார். அதிலும் இதுவரை யாரும் யோசிக்காத இந்த காம்போ எப்படியிருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பு உடன் இருக்கிறது.
அதாவது விஜய், கமலஹாசனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அண்மையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான டைட்டில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். அந்த வீடியோவில் இப்படத்தில் அதில் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுவது போல தெரிந்தது.
மேலும் பழைய படங்களில் ரஜினி எப்படி இருப்பாரோ அதே போன்ற கெட்டப்பில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார். இதனால் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
பல படங்களில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி மாவீரன் படத்தின் மூலம் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் தொடர்ந்து 100 கோடி வசூல் அடைந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தில் விஜய்சேதுபதியும் இணைந்ததால் 100 கோடி வசூல் கன்ஃபார்ம். ஆனால் இதுகுறித்து உறுதிபட தகவல் இன்னும் வெளியாகவில்லை.