விஜய் சேதுபதியை நம்பி சூர்யா, விக்ரம் பட வாய்ப்புகளை இழந்த இயக்குனர்.. வட போச்சே!

விஜய் சேதுபதி படத்தை நம்பி இடையில் வந்த சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை இழந்த இயக்குனரை பற்றி தான் கோலிவுட் வட்டாரமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதியின் சினிமா கேரியர் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என செம பிசியான நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் கைவசம் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.

அதுபோக ஏற்கனவே நான்கைந்து திரைப்படங்கள் முழுவதும் ரெடியாகி ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதில் துக்ளக் தர்பார் திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. அதைப்போல் ஏற்கனவே ரெடியாகி ரிலீஸுக்கு தடுமாறி கொண்டிருக்கும் திரைப்படம் தான் கடைசி விவசாயி.

விஜய் சேதுபதிக்கு ஆண்டவன் கட்டளை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த காக்கா முட்டை மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆண்டவன் கட்டளை படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருமே காக்கா முட்டை மணிகண்டனை அழைத்து படவாய்ப்பு கொடுத்தார்களாம்.

ஆனால் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் இருப்பதாக கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். கடைசி விவசாயி திரைப்படம் உருவாகி சில வருடங்கள் ஆன நிலையிலும் இன்னமும் தியேட்டருக்கு வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இடையில் வாய்ப்பு கொடுத்த சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருமே தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் மீண்டும் மணிகண்டனுக்கு வாய்ப்பு தருவது சந்தேகம்தான்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக ஒரு படத்தை நம்பி மிகப் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை இழந்த விட்டாரே என சினிமா வட்டாரமே கவலைப்படுகிறது. ஆனால் மணிகண்டன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

kakkamuttai-manikandan-cinemapettai
kakkamuttai-manikandan-cinemapettai