ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய விஜய்சேதுபதி.. தரமான திட்டங்கள்.!

சினிமாவைப் பொருத்தவரை வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த வாய்ப்பை சரியாக அனைவருமே பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக கையாண்ட நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. கூட்டத்தில் ஒருவராக இருந்த விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உருவாகியுள்ளார். இவரது கால்ஷீட்க்காக ஏராளமான இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது தமிழ் மொழியைத் தாண்டி பல்வேறு தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் பணியை பாராட்டி பேசியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்த நடிகர் விஜய் சேதுபதியிடம் தமிழக முதல்வரின் 100 நாள் பயணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, மிகவும் அருமையாக உள்ளது. நான் எப்போதும் சட்ட சபையில் நடக்கும் வீடியோக்களை பார்ப்பேன். தற்போது நடக்கும் சட்டசபை கூட்டம் மிகவும் அருமையாகவும், நன்றாகவும் இருக்கிறது.

இதற்கு முன்பு பார்த்த வீடியோக்களுக்கும், தற்போது பார்க்கும் வீடியோக்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தற்போது உள்ள சட்டசபை வீடியோக்கள் மிகவும் நன்றாகவே உள்ளது. தயவு செய்து அனைவரும் பாருங்கள். மேலும், எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பதில் சொல்லுவதும் ஆளுங்கட்சி கேட்கும் கேள்விக்கு எதிர்க்கட்சி பதில் சொல்லுவதும் மிகவும் இயல்பாக உள்ளது.

mk-stalin-new-plan
mk-stalin

அதிலும் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியிருந்தது அற்புதமாக இருந்தது. பள்ளி படிக்கும் மாணவர்களின் பையில் அம்மா புகைப்படத்தை எடுத்துட்டு தற்போது ஆளுங்கட்சியின் புகைப்படத்தை பதிவிட்டால் 13 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் அதை எடுக்க வேண்டாம் என்றும், அந்த 13 கோடியை மாணவர்களின் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முதல்வரின் முடிவு அருமையான செயல். ஒரு முதல்வருக்கான தகுதி அவரிடம் உள்ளது என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் சேதுபதி புகழ்ந்து பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்டாலினின் ஆட்சி குறித்து சிறப்பான கருத்துக்களை பதிவு செய்த விஜய் சேதுபதியை ரசிகர்கள் பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்