சல்மான்கான் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி.. சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த பாலிவுட் சினிமா

தமிழில் மாதத்திற்கு மூன்று படங்களை வெளியிட்டு வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. அந்த அளவிற்கு ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் மேலும் மேலும் புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். அதுவும் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளாராம். இவர் ஹிந்தியில் இயக்கிய ஜானி கத்தார், பத்லாபூர், அந்தாதுன் ஆகிய படங்கள் மிகவும் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் அந்தாதுன் படத்தைதான் தமிழில் அந்தகன் என்ற பெயரில் நடிகர் தியாகராஜன் ரீமேக் செய்துள்ளார்.

தற்போது ஸ்ரீராம் ராகவன் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் தான் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், மெர்ரி கிறிஸ்துமஸ் மூன்றாவது படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை முதலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியுள்ளார். அதேபோல் கதையும் சல்மானுக்கு பிடித்திருந்தது. ஆனால், சல்மானின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் நிறைந்ந அதிரடி படங்களை தான் விரும்புகிறார்கள். ஸ்ரீராம் ராகவனின் அமைதியான த்ரில்லர் கதையால் அவர்களை திருப்திப்படுத்த முடியாது என கூறி சல்மான் கான் இப்படத்தை தவிர்த்து விட்டாராம்.

vijay-sethupathi
vijay-sethupathi

அதன் பின்னரே இப்படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் படங்கள் மட்டுமின்றி ராஜ் & டிகே இயக்கும் புதிய வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதில் நாயகனாக ஷாகித் கபூர் நடிக்க, ராஷி கண்ணா, ரெஜினா ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் நீங்க ஹிந்நியையும் விட்டு வைக்கவில்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்