சிம்புவை தூக்கி விடும் விஜய் சேதுபதி.. எஸ்டிஆர் ஹேப்பி அண்ணாச்சி, வேற லெவல் அப்டேட்!

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில் விஜய் சேதுபதி காமெடியாக நடித்திருப்பார். இவரது சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமானது. இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கோகுல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, கார்த்தி நடித்த காஷ்மோரா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் அந்த படத்தின் டைட்டில் தான்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை கொரோனா குமார் என்ற தலைப்பில் கோகுல் இயக்க உள்ளார். இப்படத்திலும் விஜய்சேதுபதியே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தானம் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து சத்தமே இல்லாமல் இப்படத்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதனை மிகவும் ரகசியமாக படக்குழுவினர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பை இப்போது ஐசரி கணேஷ் கைப்பற்றியுள்ளாராம்.

simbu-corona
simbu-corona

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நரேட்டராக தனது குரலை மட்டும் கொடுக்க உள்ளாராம். இயக்குனர் கோகுலின் நட்பிற்காக விஜய் சேதுபதி இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இரண்டும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிம்பு இதை ஏற்றுக் கொண்டது மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களும் இதனை வரவேற்று வருகின்றன. சிம்புவுக்கு தற்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -