அடுத்தடுத்து ஹீரோவாக தோல்வியை சந்திக்கும் விஜய் சேதுபதி.. ஆனாலும் வரிசைகட்டி நிற்கும் 5 படங்கள்

வருடத்திற்கு ஆறேழு படங்களை ரிலீஸ் செய்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடிக்கும் விஜய் சேதுபதி, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர் ஹீரோவாக நடித்து வெளியான சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய ட்ராக்கை மாற்றி பேட்ட படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்தார்.

அடுத்து தளபதி விஜயின் மாஸ்டர் வில்லனாக நடித்து யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரம் நடித்து வந்தார். கடந்த ஜூன் 3-ம் தேதி ரிலீஸான விக்ரம் படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக நடித்து உச்சம் பெற்று இருக்கிறார்.

இதன்பிறகு கமலஹாசனின் இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களிலும் விஜய்சேதுபதியே எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கமலஹாசன் ஆசைப்படுகிறாராம். நான்கந்து படங்களை கையில் வைத்திருந்த விஜய் சேதுபதி மூன்று வருடத்திற்கு பிறகு தான் அடுத்த படங்களில் கமிட்டாகுவேன் என இயக்குனர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால் அதற்கு எதிர்மாறாக விடுதலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் இரண்டு படங்களும், மலையாளத்தில் ஒரு படங்களிலும் நடிக்கிறாராம். அதுமட்டுமின்றி இந்தப் படங்களுக்குப் பிறகு ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவற்றுள் வினோத் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க இருக்கிறார். வினோத் தற்போது தல அஜித்தின் 61-வது படப்பிடிப்பில் இருப்பதால், அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.

இதன் பிறகு விஜய் சேதுபதி ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ என்ற படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கும் படத்திலும், அதைத்தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் படத்திலும், ‘கடைசி விவசாயி’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சொல்ல கதைக்கும் சம்மதித்து அதில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி ஒத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து 5 படங்களில் தற்போது மட்டும் கமிட்டாகி இருக்கிறார். ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது.

Next Story

- Advertisement -