80-களில் கொடிகட்டிப் பறந்த இயக்குனருடன் கூட்டணி.. சம்பளமில்லாமல் ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் திறமையின் மூலம் உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலகட்டத்தில் அவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி பல மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கும் ஒரு குறும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்திற்கு அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக விஜய் சேதுபதி  சில எதிர்மறையான கருத்துக்களை சந்தித்து வருகிறார். அதாவது இவரின் கடந்த மூன்று படங்களான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்றவை மக்களை அவ்வளவாக கவரவில்லை. இவர் தற்போது ஒரு ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதன் காரணமாக பலரும் விஜய் சேதுபதி பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களை தேர்வு செய்வதாக விமர்சித்தனர். மேலும் மக்கள் பீட்சா, விக்ரம் வேதா, சூது கவ்வும் போன்ற திரைப்படங்கள் தான் தங்களுக்கு பிடித்தது என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் திரைக்கதையை தேர்ந்தெடுக்கும் முன்பு சிறிது யோசியுங்கள் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மட்டுமே விஜய் சேதுபதி தற்பொழுது சம்பளம் வாங்காமல் குறும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்ற கருத்து நிலவி வருகிறது.

vijay-sethupathy-1
vijay-sethupathy-1
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்