விஜய் சேதுபதி வேண்டாம், நானே நடிக்கிறேன்.. உருவாகும் தர்மதுரை 2

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தர்மதுரை. இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் விமர்சனரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படத்தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இப்படத்தில் ஆர் கே சுரேஷ் நடித்து மற்றும் படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் உருவாகும் என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த விஜய் சேதுபதி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதனால் விஜய் சேதுபதி தர்மதுரை இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறி வருகின்றனர். அப்படி நடித்தாலும் இரண்டு வருடத்திற்கு பிறகு தான் தர்மதுரை இரண்டாம் பாகம் உருவாகும் என கூறி வருகின்றனர்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் இப்படத்தில் விஜய்சேதுபதி பதிலாக ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறிவருகின்றனர். இப்படத்தையும் ஆர்கே சுரேஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூடிய விரைவில் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறி வருகின்றனர். மேலும் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தின் சீனுராமசாமி இயக்குவார் எனவும் கூறியுள்ளனர்.

RK Suresh

இதனைக் கேட்ட ஒரு சில ரசிகர்கள் விஜய்சேதுபதிக்கு பதிலாக தர்மதுரை படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்தால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறுமா என்பது தெரியாது எனக் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் ஆர்கே சுரேஷ் படத்தில் நடித்தாலும் நன்றாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர். தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால் தான் படம் எப்படி இருக்கும் என்பது தெரியும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்