கமலின் இடத்தை பிடிக்க விஜய் சேதுபதி போட்ட ஸ்கெட்ச்.. 35 வருடத்திற்கு முன் வெளிவந்த படத்தை கையில் எடுக்கிறார்

தமிழ்சினிமாவில் கலைத்தாயின் முதலாவது மகன் சிவாஜி கணேசன் இளைய மகன் கமலஹாசன் என்று பொதுவாக அனைவரும் கூறி வருவார்கள். அந்த அளவிற்கு கமலஹாசனின் நடிப்பு அன்றிலிருந்து இன்றுவரை தனித்துவமாக அமைந்திருக்கும். இதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கூறி இருந்தார். அந்த அளவிற்கு கமலஹாசன் சினிமாவிற்கு ஆகவே வாழ்ந்து வரும் முக்கியமான நடிகர் ஆவார்.

இவருக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒரு சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் முக்கியமாக தற்பொழுது விஜய் சேதுபதி பல பரிமாணங்களில் நடித்து வருகிறார். இவரும் ஒவ்வொரு படங்களிலும் நடிப்பை வித்தியாசமாக நடித்து படத்தின் மொத்த புகழையும் தனக்கு சொந்தமாக்கிக் விடுகிறார்.

Also Read : 7 வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்.. ரிலீஸை உறுதி செய்த இயக்குனர்

இவரை கருப்பு உலகநாயகன் என்ற பெயரிலும் தற்பொழுது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதனை உண்மையாக்கும் விதத்தில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் காந்தி டாக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1987-ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பேசும் படம். இந்த படம் அந்த காலகட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டு பல விருதுகளையும் பெற்ற திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பேசாமல் தன் உணர்ச்சிகள் மூலமாக நடிப்பைக் காட்டி இருப்பார். இன்றுவரை இந்த கதாபாத்திரம் வேறு எந்த நடிகரும் செய்ய வில்லை. அதனை முறியடிக்கும் விதத்தில் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஹிந்தியில் நடிக்க போகிறார். இந்த செய்தி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ஜவ்வாக இழுக்கும் இயக்குனர்.. உங்க சவகாசம் வேண்டாம் என எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி

கருப்பு உலகநாயகன் என்ற பெயரை உண்மையாக்கும் விதத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்பொழுதே பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கமலை தனது குருவாக பார்க்கும் விஜய் சேதுபதி அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை தற்போது நடித்து வருவது கமலஹாசனுக்கு மரியாதையும் அவர் நடிப்பை போற்றும் விதத்திலும் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி எது செய்தாலும் கமலைப் போல வித்தியாசமாக செய்து வருகிறார். இந்த கதாபாத்திரம் ஹிந்தியில் எடுப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது தமிழில் எடுத்திருந்தால் இன்னும் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். இருந்தாலும் அவர் முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அடுத்த கமலஹாசன் ஆக விஜய சேதுபதி வருவது இன்னும் நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு வரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் தோன்றுகிறது.

Also Read : இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்.. கூட்டணி போட தயாராகும் விஜய் சேதுபதி

- Advertisement -