ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்.. ராஜாவாக மாறும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளவர்தான் விஜய் சேதுபதி.

நடிப்பின் நாயகன் என்று கூட சொல்லலாம். விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களால் அவ்வளவு ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கிலும் விஜய் சேதுபதியின் கொடிதான் உயரப் பறக்கிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு வில்லனாக மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. ஏன் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் சிரஞ்சீவிகூட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஆறு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் விஜய் சேதுபதி. மேலும் ஒவ்வொரு படங்களுக்கும் வெறும் 10 முதல் 15 நாட்கள் தான் நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளாராம்.

ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் விஜய் சேதுபதி. கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். அந்த வகையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் விஜய் சேதுபதியை பார்க்கலாம் என்கிறார்கள்.

vijaysethupathi-cinemapettai-01
vijaysethupathi-cinemapettai-01

மேலும் தெலுங்கில் கடைசியாக வெளியான உப்பனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கொடூர வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்