விமான நிலையத்தில் குடியால் வந்த பிரச்சனையா.! விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒருவர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது. தற்போது பெங்களூர் போலீசார் தரப்பில், தாக்கப்பட்டது விஜய் சேதுபதி அல்ல அவரது உதவியாளர் என்றும் தாக்கியவர் பெயர் மகா காந்தி என்று கூறி உள்ளார்கள்.

மகா காந்தி போலீசாரிடம் கூறுகையில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக வாழ்த்தினேன். இது தேசமா என விஜய் சேதுபதி கேட்டார். குருபூஜைக்கு வந்தீர்களா என்றேன். யார் குரு என்று கேட்டார். இது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போது விஜய் சேதுபதி உதவியாளர்கள் முதலில் என்னை தாக்கினார்கள்.

அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன் என்றும் விமான நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் கேட்டுள்ளேன். சிசிடிவி காட்சிகள் கொண்டு விஜய் சேதுபதி தரப்பினர் தான் முதலில் என்னை தாக்கினார்கள் என்பதை நிரூபிப்பேன் என்று மகா காந்தி கூறியுள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதி தரப்பில், கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மகா காந்தி விஜய்சேதுபதியுடன் செல்பி எடுக்க உதவியாளர் ஜான்சனிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மகா காந்தி மது அருந்தி இருந்ததால் விஜய் சேதுபதி உதவியாளர் மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த மகா காந்தி உதவியாளரை தாக்கினார். மேலும் மகா காந்தியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிரச்சனை முடிக்கப்பட்டது என என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தாக்கப்பட்டார் என்று உலகம் முழுவதும் சர்ச்சைக்கு உள்ளானது.

இச்செய்திக்கு திரைப்பட நடிகர் சங்கம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எல்லாவற்றுக்கும் முதலாவதாக குரல் கொடுக்கும் நாம் தமிழர் சீமான் இச்செய்தி பற்றி வாயே திறக்கவில்லை. வேறு எந்தத் துறையிலும் இருந்து எதிர்ப்பு வரவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்