கப்பு முக்கியம் பிகில்னு படாதபாடு படுத்தும் வெற்றிமாறன்.. திக்குமுக்காடும் விஜய் சேதுபதி அண்ட் கோ

Vetrimaran and Vijay sethupathi: வெற்றிமாறன் இயக்கிய படங்களில் தோல்விக்கு கொஞ்சம் கூட இடமே இல்லை என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திலும் வெற்றியை மட்டுமே கொடுத்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் சர்வதேச அளவில் பேசும் அளவிற்கு வெற்றிமாறனுக்கு புகழாரம் கிடைத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வந்துவிடும், இன்னும் கொஞ்ச நாளில் வந்து விடும் என்று ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் எப்படியாவது விடுதலை இரண்டாம் பாகத்தில் நேஷனல் விருதை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார் என்றே சொல்லலாம்.

கப்பு முக்கியம் பிகலு என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வச்சு செய்கிறார். அதிலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வேற வழி இல்லாமல் அவரும் கால் சீட்டை கொடுத்து கொண்டே இருக்கிறார்.

விஜய் சேதுபதியை வச்சு செய்யும் வெற்றிமாறன்

ஆனாலும் முடிந்த பாடாக இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி தவித்து வருகிறார். இவருடன் சேர்ந்து கருணாஸ் மகன் கென் கருணாஸை வைத்தும் காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அத்துடன் மஞ்சுவாரியரும் விஜய் சேதுபதியின் மனைவியாகவும் நடித்து வருகிறார்.

இப்படி வெற்றிமாறனுக்கு தோன்றும் போதெல்லாம் புதுப்புது கதாபாத்திரத்தை கொண்டு வந்து காட்சிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதனால் மொத்த டீமுமே இவரிடம் சேர்ந்து அல்லோலபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்போதைக்கு படம் வெளி வருவதாக தெரியவில்லை.

இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை படப்பிடிப்பு போகும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணலாம் என்று பிளான் பண்ணி வெற்றிமாறன் காய் நகர்த்துகிறாரோ என்னவோ. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விடுதலை முதல் பாகம் வந்ததால் ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. இதுல இரண்டாவது பாகம் எந்த லிஸ்டில் சேர போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்