திருமணம் முடிந்த கையோடு நடிக்க வரும் 38 வயது பாலிவுட் ஸ்டார்.. விஜய்சேதுபதிக்கு அடித்த லக்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கதாநாயகன், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளார். நடிகர் விக்கி கவுஷலுடனான திருமணத்திற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வேலைக்குத் திரும்பி உள்ளார் கத்ரீனா கைப். இந்நிலையில் மெர்ரி கிறிஸ்துமஸ் கடந்த ஏப்ரல் மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு திட்டமிட்டிருந்தது.

அப்போது கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் இன்று டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று மெர்ரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை விஜய் சேதுபதி பாலிவுட்டில் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடிப்பது அவர் ரசிகர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

தற்போது தான் பயங்கர கட்டுப்பாட்டுடன் கத்ரீனா கைப் மற்றும் விக்கி கோஷல் இடையே திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தனர் ஆனால் கொரோன விதிமுறைகளின்படி அப்படி நடத்த கூடாது என தடை செய்யப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்