Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட்டில் மிரட்டலாக தயாராகும் மாநகரம்.. விஜய் சேதுபதிக்கு யாரோட கதாபாத்திரம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவாலாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களிடம் தொடர்ந்து பாராட்டை பெற்று வருகிறார்.
பேட்ட படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. அதையும் தாண்டி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்று கோலிவுட் வட்டாரத்திற்கு பெருமை சேர்த்தார் என்று கூட கூறலாம்.
இவர் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் நடித்துள்ளதால் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருதரப்பு ரசிகர்களும் இப்படத்தினை திரையில் காண காத்திருக்கின்றனர்.

vijaysethupathi-mumbaikar-titlelook
நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட், டோலிவுட்டில் நடித்து வந்தார். இப்போது அடுத்த கட்டமாக பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் ஒரு முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் முனிஸ்காந்த் நடித்திருப்பார். இந்த காமெடி கதாப்பாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

munishkanth
மேலும் இப்படத்திற்கு மும்பைகார் எனவும் பெயரிட்டுள்ளனர், இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். விஜய்சேதுபதி ரசிகர்கள் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
