எனக்கு அந்த நடிகைதான் வேணும்.. அடம் பிடித்த விஜய் சேதுபதி

vijay-sethupathi
vijay-sethupathi

தமிழ் சினிமாவில் கைவசம் படங்களை வைத்து விறுவிறுவென முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அவரை ரசிக்கும் ரசிகர்கள் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை ரசிக்கிறார்கள் என்றால் கேள்விக்குறிதான். அதுவும் கடைசியாக வெளியான விஜய் சேதுபதி படங்கள் ஒரு தடவை கூட பார்க்க முடியாது என்ற சோதனையான நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

இதை உணர்ந்த அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் எடுக்கும் இயக்குனருடன் இணையும் இதில் ஆர்வமாக இருக்கும் விஜய் சேதுபதி இடையில் மற்ற மொழிகளில் வரும் வாய்ப்பையும் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த வகையில் ஹிந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசிகன்னா அவரை நடிக்க வைக்க அவர் தான் பரிந்துரை செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராசிகன்னா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் துக்ளக் தர்பார் சங்கதமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி தரப்பிலிருந்து அவருக்கு சிபாரிசு செய்யவில்லை எனவும் இயக்குனரின் தேர்வு ராசி கண்ணாவாகத்தான் இருந்ததாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ வெப்சீரிஸ் ரிலீசானால் இன்னமும் பிரபல நடிகராக மாறி விடுவார் விஜய் சேதுபதி. சும்மாவே மனுஷன் சம்பளத்தில் உச்சத்தில் இருக்கிறார், இன்னும் இந்த மாதிரி வெப்சீரிஸ் வெளியாகி புகழ் பெற்று விட்டால் அவரின் சம்பளம் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்

Advertisement Amazon Prime Banner