விஜய் சேதுபதி கைவசம் இருக்கும் 6 படங்கள்.. கர்ணம் தப்பினாலும் மரணம் என்ற நிலைதான்

Vijay Sethupathi: யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்ட கதை தான் விஜய் சேதுபதியின் சில முடிவுகள். தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மக்கள் செல்வன். ஆனால் அவர் வில்லனாக தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் அதிக வெற்றி கிடைத்ததால் அதே லைனை பாலோ செய்தார். ஆனால் ஹீரோவாக தனக்கு இருந்த மார்க்கெட் மொத்தமாக சரிந்து விட்டது என்பதை சமீபத்தில் தான் உணர்ந்து இருக்கிறார்.

ஜவான் பட ரிலீஸ் சமயத்தில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என தன்னுடைய முடிவை சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு விஜய் சேதுபதி கைவசம் ஆறு படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

மகாராஜா: இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படம் அவருக்கு 50 வது படம். இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், நட்டி என்ற நட்ராஜ், அனுராக் காசியப் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது. மகாராஜா படத்தின் டப்பிங் வேலைகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

விடுதலை 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் விடுதலை. சூரி இந்த படத்தில் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்னும் கேரக்டரிலும் நடித்திருப்பார். இந்த படம் பெரிய அளவில் விமர்சனத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து பெருமாள் வாத்தியார் கேரக்டரை மட்டும் மையப்படுத்தி இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

காந்தி டாக்ஸ்: காந்தி டாக்ஸ் என்னும் பெயரில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் டார்க் காமெடி ஜானர். இந்த படத்தில் அதிதி ராவ் மற்றும் அரவிந்த்சாமி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இடம் பொருள் ஏவல்: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட நான்கைந்து வருடத்திற்கு முன்பு ஆரம்பித்தது. ஏற்கனவே இந்த படம் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆவதாக பேசப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இன்று வரை இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

ட்ரெயின்: இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் தான் ட்ரெயின். இந்த படத்தில் டெம்பிள் ஹயாட்டி என்பவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ் தானு தயாரித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராமன் நடித்திருக்கிறார். ட்ரெயின் படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

பிசாசு 2: 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை அடைந்த படம் தான் பிசாசு. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விஜய் சேதுபதியை வைத்து எடுத்து இருக்கிறார் மிஸ்கின். பிசாசு 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்