பாண்டியராஜனுக்கு உதவும் விஜய் சேதுபதி.. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என்று பல திறமை கொண்டவர் நடிகர் பாண்டியராஜன். இவர் பல படங்களை இயக்கி நடித்து இருந்தாலும் தற்போது குணச்சித்திர நடிகர், வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடித்த தன்னுடைய படங்களில் எல்லாம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ஆண்பாவம், மனைவி ரெடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் அஞ்சாதே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. அதில் இரண்டாவது மகனான பிரிதிவிராஜன் கைவந்த கலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தன் அப்பாவின் அளவுக்கு ரசிகர்களை இவரால் கவர முடியவில்லை.

தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற நிகழ்வில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு இவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காததால் காலப்போக்கில் மக்கள் இப்படி ஒரு நடிகர் இருந்ததையே மறந்துவிட்டார்கள்.

தற்போது இவர் பல வருடங்களுக்கு பிறகு ஒபாமா உங்களுக்காக என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். சுமார் 20 நிமிடங்களுக்கு அவர் இந்த திரைப்படத்தில் வருகிறார்.

20 நிமிடங்களுக்கு நடித்திருக்கிறார் என்றாலே இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அப்படிப் பார்த்தால் படத்தில் இவர்தான் ஹீரோ மாதிரி. எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் பிரித்வி, விஜய் சேதுபதியின் மூலம் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட முயற்சி செய்கிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை