விஜய்யிடம் எஸ் ஏ சந்திரசேகர் வைத்த கோரிக்கை.. அப்பாவை கெஞ்ச வைக்கும் தளபதி

தளபதி விஜய்யின் சினிமா கேரியரை பொருத்தவரையில் துப்பாக்கி படம் வரை விஜய்க்கு எல்லாமுமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான். விஜய்யின் ஹீரோ ஆசையை நிறைவேற்ற நஷ்டமானாலும் பரவாயில்லை என ஆரம்ப கட்டத்தில் பல படங்களை எடுத்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

பூவே உனக்காக படத்திற்கு பிறகுதான் விஜய் அடுத்தடுத்து வெளி தயாரிப்பு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்போதும் விஜய்க்கு எந்த மாதிரி கதை அமைய வேண்டும் என்பதை எஸ் ஏ சந்திரசேகர் தான் முடிவு செய்வாராம். ஏன் துப்பாக்கி படம் கூட எஸ் ஏ சந்திரசேகர் உறுதி செய்த கதை தான்.

ஏ ஆர் முருகதாஸிடம் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்யும்படி சொல்லி அதை வாங்கி விஜய்யை அதில் நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்ட வசூல் நாயகனாக மாற்றிவிட்டார். ஆனால் துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் தானாகவே கதை தேர்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது சம்பந்தமாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் நடந்துள்ளன.

இடையில் மகனுக்கு முதலமைச்சர் ஆசையை காட்டி மகனை படாதபாடு படுத்திவிட்டார் எஸ் ஏ சந்திரசேகர். சமீபத்தில் கூட விஜய் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பிக்கும் கட்சிக்கு தன்னுடைய ரசிகர்கள் எந்த ஒரு ஆதரவும் கொடுக்கக் கூடாது என விஜய் அறிக்கை விட்டது நினைவிருக்கலாம். சமீபகாலமாக விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகரும் சண்டை முற்றி விட்டதாக தெரிகிறது.

இதனால் அப்பாவை வீட்டுப் பக்கமே சேர்ப்பதில்லையாம் விஜய். சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது எனவும், அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விஜய் தன்னை சந்திப்பதை நிராகரித்த வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

vijay-sac-cinemapettai
vijay-sac-cinemapettai

விஜய் சினிமாவில் இத்தனை உயரம் வளர்வதற்கு உதவி செய்த என்னையே விஜய் மறந்து விட்டாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் இப்படி மாறுவதற்கு அவரைச்சுற்றி உள்ள ஒரு கூட்டம் தான் காரணம் எனவும் இக்கு வைத்து பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். மாய வலையில் இருந்து மீண்டு வந்து அப்பாவை அணைத்துக்கொள்ளடா மகனே என எஸ் ஏ சந்திரசேகர் ஒரே புலம்பலாம்.

- Advertisement -