நீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் கொடுத்த நக்கல் பதிலடி.. தளபதி செம!

சமீபத்தில் வந்த விக்ரம் பட அப்டேட் மற்றும் இரண்டு வருடம் கழித்து வெளிவந்த அஜித்தின் வலிமை பட அறிவிப்பு ஆகியவற்றை ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டது விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பஞ்சாயத்து.

இந்த பஞ்சாயத்து வெளிவந்தவுடன் படங்களுக்கான அப்டேட் வந்ததை கூட ரசிகர்கள் மறந்துவிட்டனர். இவ்வளவு ஏன், அஜித் படத்திற்கு வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கூட மறந்து விட்டு விஜய்யை கிண்டல் செய்வதில் தீவிரம் காட்டினார்கள் அஜித் ரசிகர்கள்.

மேலும் விஜய்யின் மீது சொல்லப்பட்ட வழக்கில், வரி ஏய்ப்பு இல்லை எனவும், வரிவிலக்கு தான் கேட்டதாகவும் ஒரு தெளிவான கருத்து உள்ளது. இது புரியாமல் விஜய் வரி கட்டவில்லை என ஒருபக்கம் ட்ரண்ட் செய்து அவரது பெயரை காலி செய்ய ஒரு கூட்டமே வேலை செய்தது.

ஆனால் விஜய் இது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டார். இதைவிட பெரிய பஞ்சாயத்தை எல்லாம் அவர் சந்தித்துள்ளார். இப்படி இருக்க நீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு, விஜய்யை வேண்டுமென்றே தாக்கிப் பேச வேண்டிய நோக்கத்தில் ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என கூறினர்.

இதைக் கேட்ட விஜய் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில், தன்னை அவமதிப்பு செய்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் மீது ஒரு வழக்கு போட்டு விடுங்கள் என தன்னுடைய வட்டாரங்களில் நக்கல் நையாண்டியாக ஜாலியாக கிண்டலடித்துள்ளார் விஜய்.

நீதிமன்றம் ஒரு லட்சம் அபராதம் வாங்கியதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, விஜய்யை பற்றி தேவையில்லாமல் கருத்துச் சொன்னது தான் இப்போது பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் விஜய்க்கு பல சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

thalapathy-vijay-cinemapettai
thalapathy-vijay-cinemapettai

Next Story

- Advertisement -