தளபதி 67 படத்தில் சம்பளத்தை குறைத்த விஜய்.. பின்னால் இருக்கும் காரணம்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மூணார் மலைப்பகுதியில் நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 படத்திற்கான சூட்டிங் மூணாறில் தொடங்க உள்ளது.

இப்போது இப்படத்தில் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறதாம். இந்நிலையில் தளபதி 67 படத்தில் லோகேஷ் மற்றும் விஜயின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. கடைசியாக விஜய் வாரிசு படத்திற்கு 130 கோடி சம்பளம் பெற்றிருந்தார்.

Also Read : வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவுடன் வரும் உதயநிதி.. கலெக்ஷன் பயத்தில் இருக்கும் தியேட்டர் அதிபர்கள்

இதனால் கண்டிப்பாக தளபதி 67 படத்தில் விஜயின் சம்பளம் 150 கோடியை எட்டிருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்காக 125 கோடி மட்டுமே விஜய் சம்பளமாக வாங்குகிறாராம். அதேபோல் லோகேஷ் ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் இந்த படத்திற்கு 20 கோடி மட்டும் தான் சம்பளம் பெறுகிறார்.

இதற்கு காரணம் தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தான். ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் முன்பே வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் கிட்ட அடித்தது. ஆனால் கோவிட் தொற்று காரணமாக படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வந்தது.

Also Read :3 இடங்களை குறி வைக்கும் லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67 க்கு இப்போவே போடும் ஸ்கெட்ச்

இதனால் அப்போது வாங்கிய பணத்திற்கு நிறைய மாதங்கள் லலித் வட்டிக்கட்டு இருந்தார். ஆகையால் தளபதி 67 படத்திற்காக விஜய் மற்றும் லோகேஷ் தலா 5 கோடி சம்பளத்தை குறைத்து உள்ளனர். அதுமட்டுமின்றி கடைசியாக விக்ரமின் கோப்ரா படத்தை லலித் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார்.

ஆனால் கோப்ரா படம் படுமோசமான தோல்வியை அடைந்து ஏகப்பட்ட நஷ்டத்தை கொடுத்துள்ளது. விஜய்யின் சொந்தக்காரர் லலித் என்பதால் அவருக்காக சம்பளத்தை குறைத்து தளபதி 67 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் இப்படம் குறித்து அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

Also Read :துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு

- Advertisement -