அரசியல் பொழுதுபோக்கு அல்ல, என் ஆழமான வேட்கை.. மக்கள் பணிக்காக நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்

Vijay: விஜய், வெற்றி மக்கள் கழகம் என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று காலையிலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த விஷயம் தற்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது.

பல வருடங்களாகவே இதற்காக தயாராகி வந்த விஜய் வரும் 2026ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியிருக்கும் மற்றொரு விஷயம் தான் ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

அதாவது மக்கள் பணிக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் கூறியுள்ளார். அந்த வகையில் அரசியல் என்பது மற்றொரு தொழிலோ அல்லது பொழுதுபோக்கோ கிடையாது. அது ஒரு புனிதமான மக்கள் பணி. என்னுடைய ஆழமான வேட்கை.

Also read: ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்க்கும் மக்கள் சக்தி.. கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய்

நீண்ட காலமாக அரசியலில் உயரத்தை மட்டுமல்லாமல் நீள அகலத்தையும் எம் முன்னோர்களிடம் பாடமாக படித்து என்னை மனதளவில் பக்குவப்படுத்தி தயார்படுத்திக் கொண்டு வருகிறேன். தற்போது நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு அரசியல் பயணத்தை தொடர இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் முழுமையாக அரசியலில் என்னை ஈடுபடுத்திக் கொள்வது தான் தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் நான் செய்யும் நன்றி கடன் எனவும் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது உறுதியாகி இருக்கிறது.

சாதாரணமாக வாய் வார்த்தைக்கு சொல்லாமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் விஜய்யின் இந்த பயணம் எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: 25 வருடம் மிளகாய் அரைத்த ரஜினி.. கமலின் பார்ட் டைம் அரசியல், தில்லாக இறங்கிய விஜய்யின் தலைமை எப்படி இருக்கும்.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்