வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தளபதி கட்சிக்கு இப்போதே வரும் வில்லங்கம்.. இமேஜை கெடுக்க வரும் புள்ளிகள்

தமிழக வெற்றி கழகத்தில் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்காக கிட்டத்தட்ட 170 ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். மாநாட்டிற்கு எதிர் புறம் 40 ஏக்கரில் பார்க்கிங் வசதிகளோடு நிலத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்து வருகிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் பொதுச்செயலாளமான நடிகர் விஜய். ஒரு தொகுதிக்கு ஐந்து ஆண் பொறுப்பாளர்கள், மற்றும் இரண்டு பெண் பொறுப்பாளர்கள் என விஜய் எல்லாவற்றையும் பக்காவாக பிளான் பண்ணி உள்ளார்.

இப்பொழுது இந்த மாநாட்டில் முழுவதுமாய் கொள்கை சம்பந்தமான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள். முக்கியமான விஐபிகள் யார் யார் வருவார்கள் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த மாநாடு முடிந்தவுடன் விஜய் கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.

ஏற்கனவே மக்கள் நீதி மையம் கமலஹாசனின் கட்சியில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் ஐஏஎஸ் போன்றவர்களை உறுப்பினராக நியமித்தார். அதை போல் தான் இப்பொழுது விஜய்யும் பல திட்டங்களை திட்டி வருகிறார். ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தான் அவருடைய இலக்காக இருந்து வருகிறது.

ஆனால் தற்போது விஜய் உடன் நடித்து நட்பு பாராட்டி வரும் நடிகர்களும், கட்சியில் இணைந்து வில்லங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விஜயுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் விஜய் டிவி புகழ் தாடி பாலாஜி. இவரை போல் உள்ள நபர்கள் புசி ஆனந்தின் கால்களில் விழுவதும். என் நண்பன் தளபதி கட்சியின் முக்கிய தொண்டன் நான் என பேட்டி கொடுப்பதும் ஆரம்பத்திலேயே பெரிய வில்லங்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

- Advertisement -

Trending News