
விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு கொஞ்ச நாட்கள் கூட ஆகாத நிலையில் தளபதி66 படத்துக்கான செய்திகள் கோலிவுட் வட்டாரங்களில் அளவுக்கு அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
இதுவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொஞ்சமும் அப்செட்டை கொடுத்துள்ளது. இருந்தாலும் நம்முடைய புரமோஷன்களை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை போல அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தளபதி 65 படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
விஜய் தற்போது தளபதி 66 படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளாராம். அந்தவகையில் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்தது.
ஆனால் விஜய் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குனராக வலம் வரும் வம்சி பைடிபல்லி என்பவர் எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வீடியோ கால் மூலமாகவே மொத்த கதையும் கூறிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இதுவரை 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தளபதி விஜய்க்கு முதல் முறையாக 120 கோடி சம்பளம் கொடுத்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றிவிட்டாராம் தில் ராஜு.
முன்னதாக தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரஜினிகாந்த் 114 கோடி சம்பளம் வாங்கியதே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது விஜய் அவரையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என்பது போன்ற செய்திகள் முன்னரை விட இப்போது அதிகமான பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
