புட்டி கண்ணாடி, கட்டம் போட்ட சட்டை.. ஓட்டு போட்ட கையோடு தளபதி 65 சூட்டிங்கிற்கு கிளம்பிய விஜய் புகைப்படம்

நேற்று இந்தியாவில் பல இடங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் தமிழகத்தில் தளபதி விஜய் ஓட்டு போடுவதற்கு சைக்கிளில் வந்தது இந்திய மீடியா அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

விஜய் சைக்கிளில் வந்ததற்குக் காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தான் எனக்குள் ஒரு கூட்டம் கிளப்பி விட்டது. ஆனால் விஜய்யின் உதவியாளர்களிடம் இருந்து வந்த செய்தி என்னவென்றால், விஜய்யின் வீட்டின் அருகிலேயே ஓட்டு போடும் இடம் அமைந்ததாகும், அந்த ஏரியா மிகவும் குறுகலான பாதை உடையதால் கார் கொண்டு சென்றால் எடுப்பதற்கு சிரமமாக இருக்கும் என்பதைக் கருதி விஜய் சைக்கிளில் சென்றதாகவும் கூறுகின்றனர்.

எது எப்படியோ நேற்றைய ட்ரென்டிங் தளபதி விஜய் தான். இந்நிலையில் ஓட்டு போட்டுவிட்டு உடனடியாக ராத்திரியோடு ராத்திரி தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு பிளைட் ஏறி விட்டார்.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காலையில் கெத்து காட்டி விட்டு மாலையில் சத்தமில்லாமல் தன்னுடைய அடுத்த பட படப்பிடிப்புக்கு கிளம்ப விஜய்யை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

thalapathy65-vijay
thalapathy65-vijay

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து நடிக்க சென்றுள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் தளபதி65 படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் தளபதி 65 வட்டாரங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்