12 வருடம் கழித்து மீண்டும் விஜய் படத்தை ரீமேக் செய்யும் பிரபல நடிகர்.. தேவையில்லாத ரிஸ்க்!

பெரும்பாலும் விஜய் தான் மற்ற மொழிகளிலிருந்து சூப்பர்ஹிட் படங்களை ரீமேக் செய்து தமிழில் நடிப்பார். ஆனால் விஜய் நடிக்கும் தமிழ் படங்கள் சமீபகாலமாக மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து தெலுங்கு சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்த சிரஞ்சீவி விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் நடித்தார். அந்த படம் 150 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2007ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் போக்கிரி. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய இந்தப் படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் தமிழ் ரீமேக்.

தமிழில் போக்கிரி என்ற படத்தை இயக்கிய பிரபுதேவா இதே படத்தை பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெயரில் இயக்கியிருந்தார். இந்த படம் 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அந்தப் படத்திற்குப் பிறகு பிரபுதேவா ஹிந்தி சினிமாவின் சிறந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபு தேவா விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம்.

பேன் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகியிருந்தாலும் மாஸ்டர் படம் இந்தியில் நினைத்த அளவு வசூலை ஈட்ட வில்லை. இதன்காரணமாக மாஸ்டர் படத்தில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து ரீமேக் செய்வதில் ஆர்வமாக இருக்கிறாராம் சல்மான் கான். ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான அதே படத்தை ரீமேக் செய்வதால் தயாரிப்பாளர் தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறார் என்கிறார்கள் பாலிவுட் வாசிகள்.

vijay-cinemapettai
vijay-cinemapettai

Next Story

- Advertisement -