ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய்யை கடுமையாக விமர்சித்த ரசிகர்கள்.. வாங்கிய அசிங்கத்தை திருப்பிக் கொடுத்த அஜித் வெறியர்கள்

இந்தியாவில் முக்கியமானதாக கருதப்படும் பொழுதுபோக்கு அம்சமான திரைப்படங்கள் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் மொழிக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதன்மையாக ஹிந்தி திரைப்படங்கள் அடுத்ததாக தமிழ்நாட்டு திரைப்படங்கள் இருந்துவந்தன. இந்த சினிமாக்களை எடுத்துக் காட்டாக வைத்து மற்ற மாநில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் காலம் மாற தொடங்கியது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்கள் 25 வருடத்திற்கு முன் உள்ளது போல் பல படங்களை எடுத்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள சூழலில் தெலுங்கு திரைப்படங்களும், கன்னட திரைப்படங்களும் உலக அளவில் போற்றப்படும் அளவிற்கு பிரம்மாண்ட முறையில் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். வசூல் சாதனையும் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் சோசியல் மீடியாவில் அந்தந்த ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கம். தெலுங்கு சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமாவை கிண்டலடித்து வருகின்றனர். இனிமேல் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட படங்கள் எடுக்க முடியாது. முடிந்தால் பாகுபலி திரைப்படம் போல் எடுத்துக் காட்டுகள் என்று கூறிவருகின்றனர். தமிழ் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை மேற்கோள் காட்டி பேசியுள்ளனர்.

ஆனால் பொன்னியின் செல்வன் பாகுபலி போன்ற எடுக்கப்பட்டுள்ளது என்று கிண்டலடித்து வருகின்றனர். இப்படி பல படங்களை கிண்டலடித்த வந்த தெலுங்கு ரசிகர்கள் அடுத்ததாக நடிகர் விஜய்யை பற்றி விமர்சிக்க தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய் நடிக்க தெரியாதவர், தெலுங்கு சினிமாவில் 12 படங்களை ரீமேக் செய்து வெற்றி பெற்றவர், ஒழுங்காக டான்ஸ் ஆட தெரியாதவர் என்று கிண்டலடித்து வந்துள்ளனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அஜித் ரசிகர்களும் விஜய்க்கு சப்போர்ட்டாக  விஜய் நடித்த 14 தமிழ் திரைப்படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து தெலுங்கு நடிகர்கள் நடித்துள்ளனர். அதனால நீங்க பேசக்கூடாது விஜய் பத்தி என்றும் இந்தியாவில் இந்த வயதிலும் விஜய் போல் டான்ஸ் மூவ்மெண்ட் பண்ணும் கதாநாயகர்கள் இல்லை.

தமிழ் சினிமாவை பேசுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் கோபத்துடன் பேசி வருகின்றனர். தெலுங்கு சினிமாவை எதிர்ப்பதற்காக விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒன்று கூடி தமிழ் சினிமாவுக்காக பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது,

- Advertisement -

Trending News