ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய்க்கும் அந்த டாப் இசையமைப்பாளருக்கும் ராசி இல்லையாம்.. கெஞ்சலில் விடும் தளபதி

தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை நடிகர்கள் இசையின் மூலமே மக்களை தன் வசப்படுத்தினார்கள். தியாகராஜ பாகவதர் இசை மூலமாகத்தான் சூப்பர் ஸ்டாராக அன்று திகழ்ந்தார். அடுத்து எம்ஜிஆர் அவர்கள் பாடல்கள் மூலமே அவர் மக்கள் மனதில் இடம் பெற்று தமிழக முதலமைச்சர் ஆகவே பதவி பெற்றார். அந்த அளவிற்கு நடிகர்களுக்கு பாடல்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆகையால் தனக்கென ஒரு இசையமைப்பாளரை வைத்துக் கொள்வது என்பது இன்றுவரை தொடர்கிறது. இளையராஜா நிறைய கதாநாயகர்களுக்கு இசை அமைத்தாலும் இளையராஜா என்றதும் நினைவுக்கு வருவது ராமராஜன் இன்னும் ஒரு சில ஹீரோக்கள் அந்த அளவிற்கு இசையும் அந்த கதைகளும் ஒன்றி விடுவார்கள்.

தற்போது உள்ள சூழலில் நிறைய இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு ஒரு சில இசையமைப்பாளர்கள் பொருத்தமாக இருப்பார்கள். விஜய்யின் வளர்ச்சியில் மிக முக்கியமானதாக அவரது நடனமும் அவரது பாடல்கள் மட்டுமே என்று அனைவரும் அறிந்த விஷயம். விஜய்க்கு அதிக இசையமைப்பாளர்கள் இசை அமைத்து இருந்தாலும் இப்போது அனிருத் மட்டுமே அவருக்கு அழகாக பொருந்தியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு ஒரு படம் மட்டுமே அதாவது புதிய கீதை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்றுவரை வேற படங்கள் இசையமைக்கவில்லை. காரணம் யுவன் சங்கர் ராஜா அஜித்திற்கு அதிகமாக இசையமைத்தார். அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா கருதப்படுகிறார்.

யுவன் சங்கர் ராஜாவும், விஜய்யும் இணைந்து பணியாற்ற ரசிகர்கள் கேட்டுக் கொண்டாலும். இன்று விஜய் காது கொடுத்து கூட கேட்கவில்லை. யுவன் சங்கர் ராஜா தற்போது ஒரு பேட்டியில் விஜய் உடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை விஜய் அதற்கு சரி என்று ஒரு பதிலும் சொல்லவில்லை

அஜித் என்றாலே யுவன் சங்கர் ராஜா என்ற நிலை உருவாகியுள்ளதை விரும்பவில்லை. இனிமேலும் இவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை. விஜய் பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் இல்லையென்றால் அனிருத் போன்றவர்களை விரும்புவார். ஆனால் இது ஆரோக்கியமானதாக கருதப்படாது.

- Advertisement -

Trending News