விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்.. அந்த மாதிரி கேரக்டர் வேண்டவே வேண்டாம்

விஜய்யுடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட முடியாத என பல பிரபலங்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு சில பிரபலங்கள் நேரடியாகவே விஜய்யின் படங்களில் நடிப்பதற்கு தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் தங்களுக்கு ஏதாவது ஒரு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்குமாறு பல பிரபலங்கள் பேட்டியில் கூறியுள்ளனர்.

இப்படி இருக்கும்போது ஆரம்பத்திலேயே விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தனுஷ் தவறவிட்டுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் பகவதி படத்தில் விஜய்யின் தம்பி கதாபாத்திரத்தில் அப்போது அறிமுக நாயகனாக இருந்த தனுசுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் தான் தம்பியாக நடிக்க முடியாது நடித்தால் ஹீரோ தான் என்பது போன்ற முடிவில் இருந்தாராம் தனுஷ். தற்போது தனுஷ் சினிமா வளர்ச்சியில் முன்னணியில் இருக்கலாம். ஆனால் அப்போது தனுசுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. மேலும் விஜயை போல் தனுஷும் முக பாவனையை வைத்து கிண்டல் செய்தனர்.

அப்போது தவறவிட்ட வாய்ப்பு தற்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை. ஆனால் அப்போது விஜய்யுடன் தனுஷ் இணைந்து நடித்திருந்தால் சீக்கிரமாகவே சினிமாவின் வளர்ச்சியில் முன்னணியில் வந்திருப்பார்.

ஆனால் தனுஷ் தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி விஜய் போல் பல வருடங்கள் கழித்து தான் சினிமாவில் வெற்றி கண்டார். ஆனால் அப்போது விஜய்க்கு ரசிகர்களின் வரவேற்பு தற்போது இருப்பது போல் அதிகமாகவே இருந்தது.

vijay-bhagavathi
vijay-bhagavathi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்