விஜய் படத்தை நம்பி தம்பி படத்தை டீலில் விட்ட செல்வராகவன்.. இது நியாயமா பாஸ்?

செல்வராகவன் தற்போது இயக்குனர் வேலைக்கு கொஞ்சம் லீவு கொடுத்து விட்டு நடிப்பதில் பிசியாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சாணி காகிதம் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

சாணிக் காகிதம் படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பானது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

முன்னதாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் நானே வருவேன் என்ற புதிய படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் நடக்கவில்லை. அதற்கு காரணம் செல்வராகவன் தற்போது நடிகராக பிசியாகி விட்டதால் தம்பி படத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என விட்டு விட்டதாக கூறுகின்றனர்.

ஆனால் செல்வராகவன் தரப்பிலோ பீஸ்ட் படத்தில் தனக்கான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டால் அடுத்து நானே வருவேன் படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடலாம் என கணக்கு போட்டுள்ளாராம். இப்போது செல்வராகவனை இயக்குனராக பார்ப்பதைவிட நடிகராக அவரை பார்க்க பலரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

naane-varuven-cinemapettai
naane-varuven-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்