2 பேரை பினாமியாக வைத்துக் காய் நகர்த்தும் விஜய்.. அரசியலில் அடி வைத்தாலும் விட்டுக் கொடுக்காத தளபதி

Vijay: விஜய் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கி மக்களுக்கு நல்லது பண்ண போகிறார் என்ற ஒரு விஷயம் தான் அனைவரையும் தளபதியை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனென்றால் சுமார் 250 கோடி சம்பாதிக்கும் ஒரு ஹீரோ, அவரால் தான் முக்கால்வாசி சினிமாவிற்கு மிகப்பெரிய லாபமே கிடைக்கிறது என்ற நிலைமை இருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது அதையெல்லாம் வேண்டாம் என்று அரசியலுக்கு வருகிறார் என்றால் கண்டிப்பாக இவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற ஒரு பேச்சு வார்த்தை மக்களிடம் நிலவி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் சினிமா மூலம் அவருக்கு கிடைக்கும் லாபம் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

அதாவது ஹீரோவாக இல்லை, மறைமுக தயாரிப்பாளராக சினிமா மூலம் இவருக்கு லாபம் வந்து கொண்டே தான் இருக்குமாம். அதற்காக ரெண்டு பேரை பினாமியாக வைத்துக் கொண்டு காய் நகர்த்தி வருகிறார். பொதுவாக விஜய் நடிக்கப் போகும் படத்திற்கு சரியான ஒரு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் அவர் உடனே தேடிப் போவது தயாரிப்பாளர் லலித்தை தான்.

இதற்கு முன்னதாக எடுத்த படங்களும் சரி, இப்பொழுது விஜய் நடிக்க போகும் தளபதி 69 படத்தையும் லலித் தான் தயாரிக்கப் போகிறாராம். அதாவது ஆரம்பத்தில் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் தனய்யா தான் தயாரிக்க போவதாக சொன்னார்கள்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் விஜய்

ஆனால் இவர்கள் யாரும் வேண்டாம் என்று கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் தளபதி 69 படத்தை தயாரிக்க இருக்கிறது என்றும் தகவல் வெளியானது. ஆனா கடைசியில் பார்த்தால் இவர்கள் யாருமே இல்லை. லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தான் தயாரிக்கப் போகிறாராம். அதற்கு காரணம் என்னவென்றால் விஜய்யின் பினாமி லலித் தான் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இவரை வைத்து பல மடங்கு லாபத்தை சம்பாதிக்க முடியும் என்று விஜய் காய் நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது. அதேபோல விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் இவரும் மறைமுகமாக சில படங்களை தயாரித்து வருகின்றாராம். இவர் தயாரிப்பதற்காக கொடுக்கும் பணம் அனைத்தும் விஜய்யின் காசு தான் என்று சொல்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு பேரை பினாமியாக வைத்து மறைமுகமாக சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்