அவசர அவசரமாய் விஜய் சந்தித்த 3 தயாரிப்பாளர்கள்.. கடைசி தடவை வார்னிங் கொடுத்த தளபதி

லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்கு பிறகு அடுத்ததாக யார் படத்தில் நடிப்பார் என விஜய் ரசிகர்கள் தற்போது பேச ஆரம்பித்துவிட்டனர். இதனால் இயக்குனர்கள் பல பேர் போட்டி போட்டு வருகின்றனர். அதேபோல் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

இதனால் மரியாதை நிமித்தமாக மூன்று பெரிய தயாரிப்பாளர்களை சந்தித்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் தயாரிப்பாளர் மற்றும் ஆர்.பி. சௌத்ரி மற்றும் ஐங்கரன். இவர்கள் விஜய்யின் படத்தை லாக் செய்வதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர்.

Also Read: விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

இதில் ஏஜிஎஸ் விஜய்யிடம் பேசும் போது நீங்கள் கேட்கும் சம்பளம் தருகிறோம். ஆனால் அட்லி இயக்குனராக வரக்கூடாது என்று கூறிவிட்டனர். ஏனென்றால் விஜய் அடுத்ததாக அட்லி படத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் விஜய்யின் பிகில் திரைப்படத்தை தயாரித்து, டிஸ்ட்ரிபியூட் செய்து நல்ல லாபம் பார்த்தது.

மேலும் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி, ஜில்லா படத்தில் விஜய்க்கு 30 கோடி சம்பளம் கொடுத்ததை பல பேரும் சொல்லி கிண்டடித்துள்ளார். இதை கேள்விப்பட்ட விஜய் இவரை இன்று வரை ஒதுக்கி வைத்துள்ளார். தற்போது ஆர்பி சௌத்ரி விஜய் நடித்த படம் எடுக்க வேண்டுமானால் விஜய்யின் சம்பளம் தெரிந்து வரவேண்டும். அப்படி வந்தால் பின்னாடி பேச கூடாது என்று நிபந்தனையோடு பேசியிருக்கிறார்.

Also Read: 3வது முறை மோதியும் அஜித்துடன் தோற்றுப்போன விஜய்.. வம்சியால் தளபதிக்கு வந்த சோதனை

ஏனென்றால் விஜய்க்கு புறம் பேசுபவர்களை சுத்தமாகவே பிடிக்காது. இதில் இந்த மாதம் இதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் தேனாண்டால் மூவிஸ் என பல பேர் விஜய் சந்தித்து வருகின்றனர் வெளிவரும். இப்படி அவசர அவசரமாக விஜய்யை அடுத்தடுத்த முன்னணி தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்திக்கின்றனர்.

இதில் யாரை விஜய் தேர்வு செய்வார் என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அதோடு தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் விஜய், இந்த படத்தின் முக்கால்வாசி படம் முடிந்த பிறகு தான் அடுத்த படத்திற்கான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை முடிவு செய்வார். அதுவரை இந்த சந்திப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.

Also Read: விஜய்யின் அருவருப்பான அரசியல்.. மட்டமான வேலைகளை புட்டு புட்டு வைக்கும் பிரபலம்

- Advertisement -