Leo Movie Review- லியோ கர்ஜித்ததா, பதுங்கியதா.! லோகேஷின் LCU ஏமாற்றமா.? விஜய்யின் ஒன் மேன் ஷோ, முழு விமர்சனம்

Leo Movie Review: ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த லியோ இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. லோகேஷ், விஜய் கூட்டணியில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது தற்போது பூர்த்தி ஆனதா என்பதை ஒரு விமர்சனத்தின் வாயிலாக இங்கு காண்போம்.

விஜய் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் காஷ்மீரில் வாழ்ந்து வருகிறார். காபி ஷாப் ஓனராகவும், விலங்கு நல ஆர்வலராகவும் இருக்கும் இவர் ஒரு ரவுடி கும்பலுடன் மோத போய் மீடியாவில் பிரபலமாகிறார். அவருடைய முகத்தை பார்க்கும் ஆன்டனி தாஸ் அவருடைய தம்பி ஹரால்டு தாஸ் இருவரும் அவரை லியோ தாஸ் என நினைத்து நெருங்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் நான் பார்த்திபன் என்று விலகி ஓடும் விஜய் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிறார். அதைத்தொடர்ந்து தாஸ் சகோதரர்களின் நோக்கம் என்ன, உண்மையில் பார்த்திபன் தான் லியோ தாஸா, இவர்களுக்குள் அப்படி என்ன உறவு என்பதை தன்னுடைய பாணியில் லோகேஷ் ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார்.

மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் ஒவ்வொரு காட்சிகயிலும் வெறித்தனமாக நடித்து ஒன் மேன் ஷோ என சொல்ல வைத்திருக்கிறார். அதிலும் முதல் 10 நிமிட காட்சி வேற லெவல். பார்த்திபன், லியோதாஸ் என வெரைட்டி காட்டி இருக்கும் அவர் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

இப்படி கிளைமாக்ஸ் வரையிலும் பரபரப்பாகவே கொண்டு சென்றுள்ளார் லோகேஷ். ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ் ஆனது ஏன் என்று தெரியவில்லை. அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு சஞ்சய் தத், அர்ஜுன் என்ற இரு வில்லன்கள் இருந்தாலும் வெயிட்டாக தெரியவில்லை. இதுவே படத்திற்கு பெரும் குறையாக இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக எல்சியூ-வை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். அது இறுதி காட்சியில் வெளிப்படையாகவே தெரியும். ஆனால் விஜய்க்கு நெருக்கமான ஒருவரின் கேமியோ இதில் இடம்பெற்று இருப்பது எதிர்பாராதது. அதேபோன்று திரிஷா வரும் காட்சிகளும் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

இப்படி இரண்டாம் பாதியில் லியோ டல் அடித்திருப்பது இது லோகேஷ் படம் தானா எனவும் கேட்க வைத்துள்ளது. அதனாலேயே ரசிகர்கள் இதை விக்ரம், கைதி அளவுக்கு இல்லை என்ற அதிர்ச்சி விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆக மொத்தம் லியோவின் கர்ஜனை சத்தம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது. இது மிகப்பெரும் ஏமாற்றம் தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

- Advertisement -spot_img

Trending News