தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப் போகும் தளபதி 68 படத்தை குறித்த அப்டேட்டை தான் ஒவ்வொரு நாளும் இணையத்தில் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் இப்போது தளபதி 68 படத்தைக் குறித்த முழு அப்டேட் கொண்ட வீடியோ ஒன்றை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதில் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்துக்கு மங்காத்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். அதேபோல ஒரு பிளாக்பஸ்டர் படத்தை விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

இந்த படத்தை ஜிவி பிரகாஷ் அல்லது யுவன் சங்கர் ராஜா இருவருள் யார் இசையமைப்பார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில், தற்போது அதுவும் தெளிவாக உள்ளது. புதிய கீதை படத்திற்குப் பிறகு 20 வருடம் கழித்து மீண்டும் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் படத்திற்கு இசையமைக்கிறார். அந்த வீடியோவில் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பு குழு ஆகியவற்றின் பெயர்கள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் puzzle ஒன்று வடிவமைக்கப்பட்டு அதில் பெயர்கள் பேனாவைக் கொண்டு வட்டமிட்டு காட்டி இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்யின் எவர்கிரீன் கதாநாயகி 4 வருடத்திற்கு பின் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் மைக்கேல், ராயப்பன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் ஏஞ்சல் என்ற கேரக்டரில் நயன்தாரா ஜோடி சேர்ந்திருப்பார்.

Also Read: தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

இந்த எவர்கிரீன் ஜோடி மறுபடியும் இப்போது தளபதி 68 படத்தில் இணைய உள்ளது. தற்போது நயன்தாரா அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணைய இருக்கிறார். பிகில் படத்திற்குப் பிறகு மறுபடியும் விஜய்- நயன்தாரா ஜோடியை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also Read: திருப்பாச்சி முதல் லியோ வரை விஜய் வாங்கிய சம்பளம்.. ஒன் மேன் ஆர்மியாக வலம் வரும் தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்